1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (13:36 IST)

இளவட்டத்தை மயக்க நயன்தாரா பயன்படுத்தும் யுக்தி இது தான்!

தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். 
 
ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். 20  வருடங்களாக சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த்க்கொண்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார். 
 
தொடர்ந்து குடும்பம் தொழில் என பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கை சார்ந்த விஷயங்களை கடைபிடிப்பாராம். அந்த வகையில் தனது முகம் பொலிவாக இருக்க தினமும் தர்பூசணி ஜுஸ் அதிகம் குடிப்பாராம். மேலும் வாழைப்பழம், ஸ்டாபெர்ரி, தேன், அவகாடா உள்ளிட்ட பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பாராம். கட்டாயம் தினமும் காலையில் இளநீர் குடிப்பாராம் இது சருமத்தையும் , உடலையும்  புத்துணர்ச்சியாக வைக்க உதவியாக இருக்குமாம். இது தான் நயன்தாரா அழகாக இருக்க முக்கிய காரணங்களாம்.