வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: புதன், 14 மே 2014 (11:12 IST)

இந்தியில் ஜீ.வி.பிரகாஷ்

பின்னணி இசையில் ஜீ.வி.பிரகாஷின் வளர்ச்சியும் தேர்ச்சியும் பிரமிக்க வைக்கிறது. வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் தங்களின் படங்களுக்கு ஜீ.வி.பிரகாஷையே அதிகம் நம்புகின்றனர்.
இந்தியில் ஜீ.வி.பிரகாஷ் புதிய படம் ஒன்றை கமிட் செய்துள்ளார். படத்தை இயக்குகிறவர் மிகப்பெரிய ஆள் என்று மட்டும் கூறியிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அந்த பெரிய ஆள் யார்?
 
ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.
 
ஜீ.வி.பிரகாஷ் இந்திப் படத்துக்கு இசையமைக்க சென்றதே ஒரு ஆச்சரியமான விபத்து. புஷ்கர் - காயத்ரியின் வ குவார்ட்டர் கட்டிங் படத்ததுக்கு ஜீ.வி.பிரகாஷ்தான் இசை. அந்தப் படத்தில் அனுராக் காஷ்யபின் தேவ் டி படத்துக்கு அமித் திரிவேதி பயன்படுத்திய ஒரு டியூனை அப்படியே பயன்படுத்தியிருந்தார். அதைக் கேட்ட அனுராக் காஷ்யப் ஜீ.வி.பிரகாஷை அழைத்து தந்த வாய்ப்புதான் கேங்ஸ் ஆஃப் வாஸேபேர். இந்தப் படத்தின் பின்னணி இசை ஜீ.வி.பிரகாஷ்தான். ஆனால் பாடல்கள் வேறு ஒருவர். படத்தின் பின்னணி இசை இந்திப்படவுலகை மிரட்டியது என்றால் மிகையில்லை. கேங்ஸ் ஆஃப் வோஸேபேர் படத்தின் இரு பாகங்களுக்கும் பின்னணி இசையமைத்த ஜீ.வி. அடுத்து அனுராக் காஷ்யப் இயக்கய அக்ளி படத்துக்கும் பின்னணி இசையமைத்தார். இந்தப் படம் சென்ற வருட கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
 
அனுராக் காஷ்யபின் படங்கள் ஜீ.வி.பிரகாஷுக்கு இந்தியில் நல்ல பெயரை சம்பாதித்து தந்துள்ளன. அதை வைத்துப் பார்க்கும் போது அடுத்து அவர் கமிட்டாகியிருக்கும் படம் முக்கியமான இயக்குனருடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.