1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Webdunia

ஆகடு - தமன்னாவுக்குப் பதில் ஸ்ருதிஹாசன்...?

மாவடுவை மாற்றி எழுதியது போல் தெரிந்தாலும், ஆகடு என்பதுதான் சரி. தெலுங்கில் இதற்கு ‌நிறு‌த்தமா‌ட்டே‌ன் எ‌ன்பதுதா‌ன் அர்த்த‌ம். மகேஷ் பாபு அடுத்து நடிக்கப் போகும் படம் இதுதான்.
FILE

ஸ்ரீனி வைட்லா நடிப்பில் மகேஷ் பாபு நடிக்க விரைவில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்தில் தமன்னா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது தமன்னாவுக்குப் பதில் ஸ்ருதிஹாசனின் பெயர் அடிபடுகிறது.

தமன்னா இதுவரை மகேஷ் பாபு ஜோடியாக நடித்ததில்லை. மேலும் ஸ்ரீனி வைட்லாவும் மகேஷ் பாபும் கடைசியாக இணைந்த தூக்குடு படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

அதனால் ஆகடு படத்தை தமன்னா ரொம்ப நம்பியிருந்தார். இந்நிலையில்தான் தமன்னாவை ஓவர்டேக் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். எல்லாம் சென்டிமெண்ட் சொக்குப்பொடி.
FILE

தமன்னாவின் கடைசி நான்கு தெலுங்குப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகவில்லை. அதேநேரம் ஸ்ருதியின் கப்பர் சிங், பலுபு என இரு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இதன் காரணமாகவே தமன்னாவுக்குப் பதில் ஸ்ருதியின் பெயர் முன்மொழியப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஆனாலும் ஹீரோயின் யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது தமன்னாவுக்கு ஆறுதலான விஷயம்.