வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 21 மே 2014 (12:05 IST)

அதுவும் நடந்துவிட்டால் ரெட்டிப்பு மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் நாயகனாக நடிக்க, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் மிகப் பிரம்மாண்டமான படம் ‘லிங்கா’ இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடிகர் வடிவேலு ஒப்பந்தமான நிலையில், தற்போது நடிகர் சந்தானமும் இணைந்திருக்கிறார்.
ஏற்கனவே ’எந்திரன்’ படத்தில் ரஜினியோடு சேர்ந்து நடித்துள்ளார். ’சூப்பர் ஸ்டாருடன் இரண்டாவது முறையாக சேர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 
 
அதுவும் ‘லிங்கா’ மிகப் பெரிய பட்ஜெட் படம். இதில் நடிக்காமல் இருந்திருந்தால்தான் மிகவும் 
வருத்தப்பட்டிருப்பேன். அதே போல வடிவேலுவும் நடிக்கிறார். அதுவும் சந்தோஷமான செய்திதான். 
 
ஆனாலும், இன்றைய எல்லா கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டேன். இருந்தாலும் கமல் சாருடன் ஒரு படத்திலும் நடிக்காதது மிகப் பெரிய குறையாக இருக்கிறது. அதுவும் நடந்துவிட்டால் இன்னும் ரெட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன்’ என்றார் அடக்கத்துடன்.