வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : புதன், 9 ஏப்ரல் 2014 (17:14 IST)

அஜீத் கலந்து கொள்ளாத அஜீத் பட பூஜை

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை இன்று காலை சென்னை வளசரவாக்கத்தில் நடந்தது. இந்த பூஜையில் அஜீத் கலந்து கொள்ளவில்லை.
வீரம் படத்துக்குப் பிறகு கௌதம் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார் அஜீத். ஆரம்பத்தை தயாரித்த ரத்னம்தான் இதற்கும் தயாரிப்பாளர். அனுஷ்கா, த்ரிஷா என அஜீத்துக்கு இரண்டு ஜோடிகள் எனவும் கூறப்பட்டது.
இந்தப் படத்தின் பூஜை இன்று காலை ரத்னத்தின் வளசரவாக்கம் சாய் பாபா கோவிலில் நடந்தது. பூஜையில் ரத்னம், கௌதம் கலந்து கொண்டனர். அஜீத் பூஜைக்கு வரவில்லை.
 

இந்தப் படத்தில் தனது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை அஜீத் துறந்திருக்கிறார். மேலும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய தோற்றம் காரணமாகவே அவர் பூஜையில் கலந்து கொள்ளவில்லையாம்.
வரும் 11 ஆம் தேதி இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.