1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 17 மே 2014 (17:37 IST)

அசோக் செல்வனின் ஜோடி பிந்து மாதவி

திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டின் சூதுகவ்வும் படத்தில் மூன்று நண்பர்களில் ஒருவராக நடித்த அசோக் செல்வனை பீட்சா 2 வும், தெகிடியும் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தின. தெகிடியின் வெற்றி அசோக் செல்வனை ஹீரோவாக நிலைநிறுத்தியுள்ளது.
தெகிடியின் வெற்றிக்குப் பிறகு பல வாய்ப்புகள் அசோக் செல்வனை தேடி வந்தன. அதில் ஒரேயொரு வாய்ப்பை மட்டும் டிக் செய்துள்ளார். அந்தப் படத்தை தயாரிப்பது நடிகர், தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக நடிப்பவர் பிந்து மாதவி. கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்குப் பிறகு பிந்து மாதவி மீதான கிரேஸ் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பவர் இந்தப் படத்தின் கதைக்காக உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
 
பிந்து மாதவி நடிக்கும் இன்னொரு படம் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும். நகுல், அட்டகத்தி தினேஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.