வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Ravivarma
Last Updated : புதன், 11 ஜூன் 2014 (16:02 IST)

அக்ஷயின் ஹாலிடே - தூளும் கிளப்பலை, துவண்டும் போகலை

அக்ஷய் குமாரின் ஹாலிடே வெளியான முதல்நாள் இந்தியாவில் 12.18 கோடிகளை வசூல் செய்தது. மோசமில்லாத நல்ல வசூல். ஆனால் சிறந்த வசூல் என்று சொல்ல முடியாது.
 
இந்த வருடம் வெளியான படங்களில் அதிக முதல்நாள் வசூல் சல்மானின் ஜெய் ஹோ படத்துக்கு. 17.55 கோடிகள். இரண்டாமிடம் குன்டே. 16.12 கோடிகள். மூன்றாமிடத்தில் 12.42 கோடிகளுடன் 2 ஸ்டேட்ஸ். நாலாமிடம்தான் ஹாலிடே. 12.18 கோடிகள். 
முதல்வார இறுதி வசூலில் மூன்றாவது இடத்தை ஹாலிடே பிடித்துள்ளது. வெளியான முதல் மூன்று நாள்களில் ஜெய் ஹோ 60.68 கோடிகளும், குன்டே 43.93 கோடிகளும், 2 ஸ்டேட்ஸ் 38.06 கோடிகளும் வசூலித்தன. ஹாலிடே 2 ஸ்டேடஸைவிட அதிகம். 41.32 கோடிகள். அதாவது ஹாலிடேக்கு மூன்றாமிடம்.
 
வெளிநாடுகளில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. பல இடங்களில் தெலுங்கு மனம் படத்தின் வசூலைவிட குறைவு.
 
இந்தியாவின் முதல் 100 கோடி வசூல் படத்தை தந்த முருகதாஸின் இரண்டாவது இந்திப் படம் இன்னும் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்த்தனர். 200 கோடிகளை அனாயாசமாக தாண்டும் என்பதே ஹாலிடே குறித்த அபிப்ராயமாக இருந்தது. 
 
இன்றைய நிலையில் 200 கோடிகள் வசூலித்தால் அதுவே பெரிய சாதனைதான்.