1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Written By வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Last Updated : சனி, 12 மார்ச் 2016 (12:20 IST)

செல்வந்தரான விஜய் மல்லையாவிற்கு ஒரு நியாயம், ஏழை விவசாயிக்கு ஒரு நியாயமா?

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளரும் மதுபான ஆலை அதிபருமான விஜய் மல்லையா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயும், தனியார் வங்கிகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளார்.


 


 
அதன்படி, வாராக்கடன் விவகாரத்தில் மத்திய ரிசர்வ்வங்கி, பொதுத்துறை வங்கிகளுக்கு காலக்கெடு விதித்து, கடனை வசூலிக்குமாறு உத்தரவிட்டது.
 
இதைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கவும் அவரைக்கைது செய்யவும் கடன் மீட்பு ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டது.
 
மேலும், விஜய் மல்லையா வெளிநாடுகளுக்கு தப்பி ஓடாமல் தடுக்க, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
 
இந்நிலையில், விஜய் மல்லையா மார்ச் 2ஆம் தேதியன்று நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளதாகவும், மல்லையா தற்போது இங்கிலாந்தில் இருப்பதாகவும் தெயவந்துள்ளது.
 
தற்போது, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மல்லையா, "தான் எங்கும் தப்பிச் சென்று தலைமறைவாகவில்லை என்றும், தனது வியாபார நிமித்தமாகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.
 
பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திருப்பிச் செலுத்தாமல், ஹாயா வெளிநாட்டில் வலம் வருகிறார் ஒரு தொழிலதிபர்.


 

 
ஆனால், தஞ்சாவூரைச் சேர்ந்த பாலன் என்ற ஒரு சாதாரன விவசாயி தான் வாங்கிய டிராக்டருக்கான கடனை கட்டவில்லை என்று காவல்துறையினரை விட்டு கடுமையாக அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டியபடி இழுத்துச் வெல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நிகழ்கின்றன.
 
அப்படி என்றால் இந்த நாட்டில் பணக்காரர்கள் எவ்வளவு அன்போடும், பரிவோடும் பார்க்கப்படுகிறார்கள் என்பதும், ஏழைகள் எவ்வளவு கடுமையாக நடத்தப்படுகின்றனர் என்பதையும் எடுத்துக் காட்டுவதாக இந்த சம்பவம் உணர்த்துகின்றது.
 
சட்டத்தின் முன் அனைவரும் நலம் என்ற சொல்லப்படுவது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றது என்பதை அறிவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்பதை உணர முடிகின்றது.
 
இந்த சம்பவத்தில் யார் மீது கோபப்படுவது, நமது நாட்டின் அரசியல் வாதிகளின் மீதா? அல்லது நாட்டின் பெருவாரியான சொத்துக்களை கையில் வைத்துக் கொண்டு அரசையும், சட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ளும் மல்லையாவைப் போன்ற முதலாளிகள் மீதா? அல்லது, எதைப்பற்றியும் அக்கறையின்றி எல்லா நிகழ்வுகளையும் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அப்பாவித்தனமாக பொதுமக்களின் மனநிலையையா? இல்லை எல்லாவற்றையும் மேம்போக்காகவும், குறுகிய பார்வையுனும் பார்க்கும் அறிவாளிகள் மீதா?...