1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2016 (16:11 IST)

இசைஞானி இளையராஜாவை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

இசைஞானி இளையராஜாவை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு.


 


இளையராஜா ரீ-ரெக்கார்டிங்கிற்கு முன்னர் ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தைப் பார்ப்பாராம். மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது இசைக்கான நோட்ஸ் எழுத ஆரம்பித்துவிடுவாராம்.

அந்த காட்சிகளைப் பார்த்தபடி இசைகுறிப்புகளை எழுதுவாரம் அந்த காட்சி முடிக்கும்போது இசைக் குறிப்புகளையும் முடித்துவிடுவாரம். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது என்று வியப்பாகக் கூறப்படுகிறது.
 
சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீ-ரெகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம் தானாம். மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களைக் கொண்டு அந்த படத்திற்கு இசையமைக்கப்பட்டதாம்.
 
இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், இளையராஜா ஒரு படத்திற்கு அரைநாளில் மொத்த ரீ-ரெகார்டிங்கையும் செய்துமுடிதாராம்.(நூறுவாது நாள் படத்திற்கு).
 
ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. "தென்றல் வந்து தீண்டும்போது..." என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தானாம்.

இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அவரது 1000 மாவது படம் தாரை தப்பட்டை என்பது குறிப்பிடத்தக்கது.