வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (09:53 IST)

என்னை அறிந்தால் விமன் ஆடியன்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும் - கௌதம் பேட்டி

என்னை அறிந்தால் ஃபெப்ரவரி 5 வெளியாகிறது. படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கும்நிலையில் படம் குறித்த கௌதமின் பேச்சு அந்த ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதத்தில் உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதமின் பேச்சு உங்களுக்காக.
இது அஜீத்துக்காக எழுதப்பட்ட கதையா இல்லை ஏற்கனவே எழுதப்பட்டதா?
 
யூஷ்வலா ஒரு ஃபுல் ஸ்டோரியோடதான் போவோம். இல்ல ஏதாவது ஐடியா இருக்கும். அதை வச்சுதான் ஹீரோ உள்ள வந்து வொர்க் பண்ணுவார். பட், இந்தப் படத்தை பொறுத்தவரை ரத்னம் சார் போன் பண்ணி வரச்சொல்லி, அப்புறம் அஜீத் சாரை மீட் பண்ணி, இரண்டு மூணு டிஸ்கஷன் போய் அதற்கப்புறம், சரி, அவருக்கு இந்த மாதிரி எழுதலாம்னு ப்ரெஷ்ஷா அவரை மைண்ட்ல வச்சு எழுதின ஸ்கிரிப்ட்.  
 
முழு ஸ்கிரிப்டையும் முடித்துதான் ஷுட்டிங் கிளம்பினீர்களா?
 
த்ரீ ஃபோர்த் ரெடியானதுமே ஷுட்டிங் போலாம்னு ரத்னம் சார் சொல்லிட்டார். அஜீத் சாரும் சொன்னார். சரின்னு ஷுட்டிங் போய்ட்டோம். அது எனக்கு நல்ல விஷயமாக தெரிஞ்சது. ஏன்னா, அந்த கேரக்டரை இன்னும் அதிகமாக புரிஞ்சுகிட்டு அவரோட ஸ்டைல் பெர்பாமன்ஸ் எல்லாத்தையும் வச்சு, டுவேர்ஸ் கிளைமாக்ஸ் வொர்க் பண்ணியிருக்கோம். 
 
படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?
 
எல்லாத்தையும் தாண்டி முக்கியமானது, இந்த புராஜெக்ட்ல இணைஞ்சு வேலை பார்த்ததுதான். இன்னும் சில நாளில் படம் வெளியாகும், நல்லா போகும் அப்படிங்கிறதையெல்லாம் தாண்டி, அஜீத் சார்கூட வொர்க் பண்ணுனது, யாருக்கும் தெரியாத அவரோட இன்னொரு பக்கத்தை பார்க்க 
வாய்ப்பு கிடைச்சது நல்ல அனுபவமாக இருந்தது.
 
அஜீத்தின் ரசிகர்களை திருப்திப்படுத்துற மாதிரி எடுக்கப்பட்ட படமா இது?
 
இந்தப் படத்தை ஒரு என்டர்டெய்னராதான் ட்ரீட் பண்ணியிருக்கேன். அஜீத் சார் ஃபேன்ஸை மனசில் வச்சு, அந்த மாதிரி பண்ணலாமானு நினைச்சப்போ, அந்த மாதிரி எல்லாம் வேண்டாம். நீங்க என்ன பண்ணுவீங்களோ அதை பண்ணுங்கன்னு முதல்லயே கிளியரா சொல்லிட்டார். சோ, அது ஒரு பிராப்ளமா இல்ல. 

இதில் உங்கள பங்களிப்பு மற்ற படங்களிலிருந்து ஏதாவது விதத்தில் மாறுபட்டிருந்ததா?
 
எனக்கு என்னோட கரியர்ல ரீமேக் எல்லாம் சேர்த்து இது பதினாலாவது படம். இது என்னோட பெஸ்ட் படமா இருக்க எல்லா முயற்சியும் செய்திருக்கேன்.
இது எந்த மாதிரி படம்?
 
ஜானரா சொல்லணும்னா, இதுவொரு எமோஷனல் ஆக்ஷன் த்ரில்லர். படத்துல நிறைய எமோஷன்ஸ் இருக்கு. இது விமன் ஆடியன்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும். அது இல்லாம இதில் க்ரைம் இருக்கு. ரொம்ப ஹார்சா வயலண்டா இல்லாம கரெக்டா அந்த க்ரைமை ஹேண்டில் பண்ணியிருக்கோம். 
 
அஜீத்துக்கு நிறை கெட்டப்புகள் மேக்கப்புகள்....?
 
மேக்கப் அப்படீன்னு எதுவுமே பண்ணலை. உதாரணத்துக்கு 25 வயசிலயிருந்து 40 க்குள்ளால ஒருத்தரோட கதைன்னு எடுத்துகிட்டீங்கன்னா வெவ்வேறு வயசுல வேற வேற லுக்ல இருப்பாங்க. அதைதான் இதில் காட்டியிருக்கோம். மத்தபடி வேணும்னே மேக்கப் போட்டு எதுவுமே நாங்க பண்ணலை. 
 
அஜீத்துக்கும் உங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதா ஒரு பேச்சு இருந்ததே?
 
எனக்கும் அஜீத் சாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்திச்சின்னா 24 ஹவர்ஸ் வந்து டப் பண்ணியிருக்க மாட்டார். தொடர்ந்து 22 மணிநேரம் அவர் டப்பிங் பண்ணினார்.