1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (18:20 IST)

எனக்கு என்ன வருகிறதோ அதனை செய்யப் போகிறேன் - அறிமுக நடிகர் சிரிஷ் பேட்டி

எனக்கு என்ன வருகிறதோ அதனை செய்யப் போகிறேன் - அறிமுக நடிகர் சிரிஷ் பேட்டி

மெட்ரோ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் சிரிஷ். நாளை - 24-06-16 - படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் பத்திரிகையாளர்களை சிரிஷ் சந்தித்தார்.


 
 
நடிப்புக்கு வந்தது எப்படி?
 
பத்தாம் வகுப்பில் படிக்கும் போதே நடிகனாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அந்த ஆர்வம்தான் இன்று என்னை நடிகனாக்கியது.
 
உங்கள் விருப்பம் நனவானதற்கு என்னவெல்லாம் செய்தீர்கள்?
 
லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்கும் போது கலைராணி மேடத்திடம் நடிப்பு, பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம், ஜெயந்தி மேடத்திடம் நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன்.
 
மெட்ரோ வாய்ப்பு எப்படி கிடைத்தது?
 
ஆள் படம் முடிவடையும் தருவாயில் இருந்தே எனக்கு இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனைத் தெரியும். அதற்குப் பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் மெட்ரோ கதையை தயார் செய்தவுடன் அதற்கான ஆடிசனில் கலந்து கொள்ள சொன்னார். கலந்து கொண்டேன். அப்படித்தான் மெட்ரோவில் நடிக்க தேர்வானேன்.
 
இந்தப் படத்துக்காக ஸ்பெஷல் பயிற்சி எதுவும் எடுத்துக் கொண்டீர்களா?
 
மெட்ரோவில் நடிக்க தேர்வான பிறகு, கதையை முழுமையாக தெரிந்து கொண்டு, கலைராணி மேடத்திடம் மீண்டும் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
 
முதல்நாள் கேமரா அனுபவம் எப்படி இருந்தது?
 
முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கு கேமரா முன்னால் நடிப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், படக்குழுவினர் தான் முழுக்க எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அதற்கு இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் சாருக்கும் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார்? யாரை பின்பற்ற விரும்புகிறீர்கள்?
 
எனக்கு நிறைய நடிகர்களைப் பிடிக்கும். ஆனால் அவர்கள் யாரையும் பின்பற்றாமல் எனக்கு என்ன வருகிறதோ அதை செய்யலாம் என்று இருக்கிறேன். அதற்கேற்ப கதைகளை தேர்வு செய்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.
 
வேறு படங்கள் ஏதோனும் கைவசம் உள்ளதா?
 
இப்போது ஒரு ஹாரர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து முடிவானவுடன் முறையாக படக்குழு அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது.