திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (09:35 IST)

கணவருடன் விவாகரத்து? மனம் குமுறிய அர்ச்சனா - வைரல் வீடியோ!

விஜே அர்ச்சனா கணவருடன் விவாகரத்தா? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!
 
படபடவென பேசி கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் விஜே அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்து பல ஆண்டுகளாக மீடியாவில் போல்டான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். 
 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தன் மகள் சாராவுடன் சேர்ந்து அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு நல்ல மவுஸ் கிடைத்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட அர்ச்சனா நானும் என் கணவரும் ஒரு மாதத்திற்கு முன்னர் விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறி கதறி அழுதுவிட்டார். 
 
அவரின் கணவர் வினீத் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். அதனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை தான் குடும்பத்தை சந்திக்க நேரம் கிடைக்குமாம். இதனால் 20 வருடங்களாக இடைவெளி இருப்பதால் பிரச்சனை நிலவி வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பிரச்சனை வலுவடைந்துவிட்டதாம். 
 
இதனால் இருவரும் பிரிய முடிவெடுத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிக்கொண்டார்களாம். பின்னர் 15 நாட்கள் முன்பு கணவர் வினீத்துக்கு திடீரென விசாகபட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் கிடைத்துள்ளது. பின்னர் மகள் சாரா தான் இருவரிடமும் தனித்தனியாக பேசி சேர்த்துவைத்தாராம்.