வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By bala
Last Updated : வியாழன், 2 மார்ச் 2017 (19:46 IST)

பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வோருக்கு தூக்குத் தண்டனை - நடிகை வரலட்சுமி ஆவேசப் பேட்டி

பாவனா விவகாரம் நடிகைகளுக்கு மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், ஒரு நடிகை பாதிக்கப்படும்போதுதான் இவர்களின் அறச்சீற்றம் வெளிவருகிறது என்று விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். எதுவாக இருப்பினும், பெண்கள் இது குறித்து பேசவும், செயலாற்றவும் முன்வருவது ஆரோக்கியமான முன்னேற்றம். நேற்று நடிகை வரலட்சுமி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.


 


பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து பேசவும், செயலாற்றவும் தூண்டியது எது?

தனியார் டிவி நிகழ்ச்சி தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரால் பாதிக்கப்பட்டதாக நான் ட்விட்டரில் பதிவிடும் முன், நிறைய ஆலோசித்தேன். நிறைய எதிர்ப்பு வரும் என்று நினைத்தேன். ஆனால், ஆதரவுக்குரல்தான் அதிகமாக இருந்தது. அதனால் அதை அப்படியே விட்டுவிடாமல் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போக நினைத்தேன்.

பெண்கள் பாதுகாப்பு இப்போது எப்படி உள்ளது?

இந்தியாவிலேயே தமிழகம்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம். ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இன்னும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது. பெண்களுக்கு, திரைத்துறையில் மட்டுமின்றி பிற துறைகளிலும் உடல் மற்றும் மனாPதியான கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

இந்த விஷயத்தில் உங்கள் கோரிக்கைகள் என்ன?

இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு இரண்டு கோhpக்கைகள் வைக்கிறேன். முதலாவதாக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும். இரண்டாவது வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு தர வேண்டும்.

உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் தேதி சென்னை எழும்பூர் மைதானத்தில் சேவ் சக்தி என்ற பெயரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறேன். காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைவரும் கையெழுத்துப் போடலாம். அதனை மாநில அரசிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.

நடிகர் சங்கம் இதில் உதவுமா?

நடிகர் சங்கம் உள்பட திரைத்துறையினர் யாரிடமும் எந்த கோரிக்கையும் வைக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் திரைத்துறையில் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க தனி அமைப்பு தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்கிறவர்களுக்கு இப்போதைய தண்டனை போதுமானதா?

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பு விஷயங்களை ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலிருந்தே தொடங்க வேண்டும். எதிர்காலத்தில் சினிமாவிலும், பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும் என்று நம்புகிறேன்.