புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (12:24 IST)

இது வேற ஒன்னு குறுக்கால வந்து காமெடி பண்ணிக்கிட்டு - பப்லிசிட்டிக்காக மீராவிடம் சென்ற வனிதா!

கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் விவகாரம் பரவலாக பேசப்பட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். பப்ளிசிட்டிக்காக  விஜய்,  சூர்யா என பெரிய நடிகர்களை வம்புக்கு இழுத்து அவரது ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி வருகிறார்.

இதற்கு முன் மீரா சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு என பல நடிகைகளை குறித்து பேசியுள்ளார். அப்போதெல்லம் சீ போ என்று உதறி தள்ளிய நெட்டிசன்ஸ் மீரா விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறு பேசியதும் வச்சு விளாசித்தள்ளினர். இந்நிலையில் தற்ப்போது நடிகை வனிதா பேட்டி பேசியபோது இதுகுறித்து கேட்டதற்கு,

என்னை பற்றி அவதூறாக பேசும் போது ஏன் யாரும் வரவில்லை. அதுவே விஜய், சூர்யா என்றதும் படையே கிளம்பிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் ஸ்டார் வேல்யூ தான்.  உச்ச நட்சத்திரம் அந்தஸ்தில் இருக்கும் பிரபலங்களை பற்றி பேசினால் தான் தட்டிக்கேட்பார்கள். இது ரொம்ப தப்பு யார் யாரை பற்றி பேசினாலும் தவறுதான் என்று வனிதா தனக்கு ஆதரவு கொடுக்காததற்கு ஆதங்கப்பட்டுள்ளார். இப்போ மீரா - வனிதா என்று புதிய பிரச்னை கிளப்பாமல் இருந்தால் சரி.