செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 15 ஜனவரி 2015 (14:38 IST)

வலியவன் நல்லா வந்திருக்கு - இயக்குனர் சரவணன் பேட்டி

வலியவன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. தனது படத்தைப் போலவே தெளிவாக பேசுகிறார் இயக்குனர் சரவணன். பேச்சில் சில இயக்குனர்களுக்கு இல்லாத நம்பிக்கை பளிச்சிடுகிறது.
 

 
வலியவன் எந்த மாதிரி படம்...? படம் எப்படி வந்திருக்கு?
 
வலியவன் ஒரு லவ் ஆக்ஷன் மூவி. இதுல எல்லா டெக்னிஷியன்களும் ரொம்ப எஃபோர்ட் எடுத்து பண்ணியிருக்காங்க. முக்கியமாக தயாரிப்பாளர். ஜெய், நான்... இந்த காம்பினேஷனுக்கு எவ்வளவு பட்ஜெட் அலவ் பண்ண முடியுமோ அதை மீறி பண்ணியிருக்காங்க.
 
அதுக்கு என்ன காரணம்?
 
இந்த ஸ்கிரிப்ட் மேல அவங்களுக்கு இருந்த நம்பிக்கை.
 

 
நம்பிக்கையை காப்பாற்றியிருக்கீங்களா?
 
அந்த நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரி படமும் நல்லா வந்திருக்கு. அவங்க என்மேல வச்ச நம்பிக்கைக்கு எப்போதும் என்னுடைய நன்றி. அப்புறம் என்னோட அசிஸ்டெண்ட்ஸ். சின்னச் சின்ன லொகேஷன்ஸுக்கும் ரொம்ப மெனக்கெட்டு தேடி நிறைய கஷ்டப்பட்டாங்க.
 
ஆண்ட்ரியா பற்றி...?
 
ஆண்ட்ரியாகூட இதுக்கு முன்னால வொர்க் பண்ணுனதில்லை. எப்படி இருப்பாங்கன்னு தெரியாது. பட், ரொம்ப டெடிகேட்டா வொர்க் பண்ணுனாங்க.
 

 
ஆண்ட்ரியாவை நீங்கதானே ஒப்பந்தம் செய்தீங்க? அப்புறம் ஏன் அவங்களைப் பற்றி தெரியாதுன்னு சொல்றீங்க?
 
ஆண்ட்ரியாவோட கேரக்டரை சொல்றேன். நாம ஸ்கிரீன்ல பார்க்கிறேnம் அவ்வளவுதான். அவங்ககூட கம்யூனிகேஷன் எப்படியிருக்கும், சொல்றதை எப்படி ரிஸீவ் பண்ணிப்பாங்க. இந்த மாதிரி விஷயங்களை சொல்றேன்.
 
இசை மற்றும் மற்ற டெக்னீஷியன்கள்?
 
மியூசிக் இமான் சார் பண்ணியிருக்கார். மொத்தம் ஐந்து சாங்ஸ் இருக்கு. கேமரா தினேஷ் பண்ணியிருக்கார். ஆர்ட் டைரக்ஷன் ராஜமோகன். எஸ்.கே.ஸ்டுடியோஸ் சம்பத் புரொடியூசர். 
 
காமெடி...?
 
காமெடிக்குன்னு யாரும் இல்ல. என்னோட முந்தையப் படங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எப்படி என்டர்டெய்ன்மெண்டா சொல்லியிருப்பேனோ அது இதுலயும் இருக்கும்.  
 
படம் எப்படி வந்திருக்கு, எப்போ ரிலீஸ்?
 
படம் நல்லா வந்திருக்கு. டாக்கி போர்ஷன் முடிஞ்சிடுச்சி. மூணு சாங்ஸ் மட்டும்தான் பாக்கியிருக்கு. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போய்கிட்டிருக்கு. ஃபெப்ரவரி ரிலீஸுக்கு பிளான் பண்றோம்.