வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 6 பிப்ரவரி 2015 (10:54 IST)

தாரை தப்பட்டை குறித்து சசிகுமார், வரலட்சுமி, இளையராஜா பேட்டி

பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடந்து வருகிறது. இளையராஜா இந்தப் படப்பிடிப்புக்கு பாலாவின் அழைப்பின் பேரில் வருகை தந்தார். அதனையொட்டி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. படம் குறித்து சசிகுமார், வரலட்சுமி, இளையராஜா ஆகியோர் பேட்டியளித்தனர்.
சசிகுமார்
 
தாரை தப்பட்டை பற்றி சொல்லுங்க?
 
பாலா சாரோட படம். இளையராஜா சாரோட ஆயிரமாவது படம். தஞ்சாவூர்லதான் ஒரு மாசத்துக்கு மேலா ஷுட்டிங் நடத்திகிட்டு இருக்கோம். பராம்பரிய கலையார்வமிக்க இடம். இங்க வந்து வொர்க் பண்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
 
தாரை தப்பட்டை எந்த மாதிரியான படம்?
 
கலைஞர்களை பற்றிய படம்.
 
இதுவரை மதுரைக்காரராக நடித்தீர்கள். இப்போது தஞ்சாவூர்காரராக நடிப்பது எப்படி இருக்கு?
 
நல்லாதான் இருக்கு. மதுரை, தேனியெல்லாம் டவுனாயிடுச்சி. தஞ்சையும்தான். இந்தப் படத்துல கிராமத்தில் நடிக்கிறது நல்லாயிருக்கு. 
இளையராஜா
 
திடீரென்று தாரை தப்பட்டை ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறீர்களே?
 
கும்பகோணம் போற வழியில ஆன் தி வே பார்த்திட்டுப் போறேன்னு சொன்னதுக்காக பாலா உங்களை இப்படி அழைச்சு வச்சிருக்கார். 
 
ஆயிரமாவது படம் இது. அந்த சந்தோஷத்தை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்?
 
என்னோட சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறதுன்னா, என்னோட தலைவலியை பகிர்ந்துக்க முடியுமா? இது என்னோட சந்தோஷமில்லை, ஆயிரமாவது படம்ங்கிறது உங்களோட சந்தோஷம். அந்த சந்தோஷம்தான் என்னோட சந்தோஷம். 
 
தாரை தப்பட்டை...?
 
பாலாவுக்கு இது மத்த படங்களைவிட ரொம்ப சேலஞ்சிங்கான படமா இருக்கும். ஸ்கிரீன்ப்ளேயிலயிருந்து எல்லாம் தெரியும். அதை சும்மா பார்த்திட்டு போகலாம்னுதான் வந்தேன்.
 

வரலட்சுமி
 
பாலா பற்றி சொல்லுங்க...?
 
பாலா சார் பற்றி சொல்ற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளில்லை. ஆல்ரெடி எல்லோருக்கும் தெரியும், அவர் இந்த இன்டஸ்ட்ரிக்கு எவ்வளவு பெரிய கிஃப்டுன்னு. அவர் படத்துல எனக்கு வாய்ப்பு தந்து நடிக்க வச்சது எனக்கு ரொம் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. 
 
சசிகுமார்...?
 
சசிகுமார்கூடதான் நடிச்சிட்டிருக்கேன். அவர்கூட நடிக்கிறது உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கு. அவர் படங்கள் பார்த்திருக்கேன். எல்லாமே ரொம்பப் பிடிக்கும். 
 
தஞ்சாவூர்ல எவ்வளவுநாளா ஷுட்டிங் நடந்துகிட்டிருக்கு?
 
அறுபது நாளா ஷுட்டிங் போய்கிட்டிருக்கு. இங்க இருக்கிற எல்லோரையும் தெரியும், நல்லா பழக்கமாயிட்டாங்க. இந்த காலனியில் இருக்கிற எல்லோருமே ஒரு ஃபேமிலியா ஆயிட்டாங்க. 
 
படத்தின் கதை?
 
கதை பற்றியெல்லாம் நான் சொல்ல முடியாது. என்னோட கேரக்டர் ஒரு கரகாட்ட டான்சர். அவங்க வாழ்க்கையை பற்றிய படம்தான் இது.