ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Updated : சனி, 9 ஏப்ரல் 2022 (16:34 IST)

11ம் ஆண்டு திருமணநாள் கொண்டாடும் சன்னி லியோன் - உருக்கமான பதிவு!

அமெரிக்க ஆபாச நடிகையான சன்னி லியோன் பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். கிளாமரான காட்சிகளில் நடித்து கில்மா நடிகையாக நடித்து திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். இவர் தன்னுடன் ஆபாச திரைப்படங்களில் நடித்த டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் இன்று தனது 11ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சன்னி லியோன் அதுகுறித்த இன்ஸ்டா பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "எங்களிடம் பணம் இல்லாத காலம், 50க்கும் குறைவான விருந்தினர்கள், எங்கள் வரவேற்புக்கு பணம் செலுத்த திருமண கவர்களை திறந்தது, பூச்சொரிதல் எல்லாம் தவறு, குடிபோதையில் மோசமான பேச்சு மற்றும் அசிங்கமான திருமண கேக்... நாம் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்பதை நினைவூட்டுகிறது. ஒன்றாக நாம் பகிர்ந்து கொள்ளும் அனைத்து அன்பும் இல்லாமல் என்னால் முடியாது.
 
நான் எங்கள் திருமணக் கதையை விரும்புகிறேன், ஏனென்றால் அது எங்கள் முழு பயணத்தையும் போலவே "எங்கள் வழி". இனிய ஆண்டுவிழா பேபி" என கூறி பதிவிட்டுள்ளார்.