1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: சனி, 28 ஜனவரி 2017 (11:44 IST)

இன்னும் 20 வருஷம் இங்கேதான் இருப்பேன் - சன்னி லியோன் பரபரப்பு பேட்டி

நீலப்பட நடிகை சன்னி லியோன் இப்போது இந்தியாவின் செலிபிரிட்டி. பீட்டா அவருக்கு பர்சன் ஆஃப் தி இயர் விருது  வழங்கியிருக்கிறது. ஷாருக்கானின் ராயிஸ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய தெம்பில் சன்னி லியோன் அளித்த பேட்டியின் தமிழாக்கம் உங்களுக்காக...

 
இந்திப்பட உலகு உங்களை எப்படி பார்க்கிறது?
 
இந்தி படவுலகில் எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. நீலப்படத்தில் நடித்து இருக்கிறேன் என்று என்னை பலரும்  வெறுப்பாகவே பார்த்தனர். இந்தி பட உலகில் அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்று கூறினார்கள். இன்னும் 2 மாதங்கள்தான்  இங்கு இருப்பார் அதன்பிறகு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர் நாட்டுக்கே திரும்பி விடுவார் என்று பேசினார்கள்.
 
ஆரம்பத்தில் இந்திப்பட உலகில் உங்க ஆர்வம் என்னவாக இருந்தது?
 
ஆரம்பத்தில் பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே  தயங்கினார்கள். இதனால் மனம் நொந்த நிலையில் இருந்தேன்.
 
இப்போது நிலைமை மாறியிருக்கிறதா?
 
இப்படியொரு நிலைமையில்தான் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம்  ஆடினேன். இதன்மூலம் பெரிய நடிகர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில்  இருக்கிறேன்.
 
இதற்கு ஷாருக்கான் எதிர்ப்பு தெரிவித்தாரா?
 
இல்லை. நான் நடிப்பதற்கு ஷாருக்கான் எதிர்ப்பு சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என்னால் நடித்திருக்க முடியாது.
 
இப்போது உங்கள் மனநிலை என்ன?
 
கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்களில் நான் நடிக்க முடியாது என்று கேலி  பேசியவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன். அவர்கள் மீது கோபம் வருகிறது. பெரிய கதாநாயகர்கள் என்னை அவர்கள்  பக்கம் நெருங்க விடமாட்டார்கள் என்று சொன்னவர்கள் கருத்தை இது பொய்யாக்கி இருக்கிறது. இனிமேல் மற்ற  கதாநாயகர்களும் என்னுடன் நடிக்க ஆட்சேபிக்க மாட்டார்கள்.
 
உங்கள் வருங்கால திட்டம்?
 
2 மாதத்தில் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் என்றார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறேன்.  இன்னும் 20 ஆண்டுகள் இங்கேதான் இருப்பேன். கடவுள் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. எனது வளர்ச்சியை யாராலும் தடுக்க  முடியாது.