Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்புவை விட்டு பிரிந்ததற்கு இதுதான் காரணம் - மனம் திறந்த ஹன்சிகா


Murugan| Last Modified திங்கள், 27 மார்ச் 2017 (11:55 IST)
நடிகர் சிம்புவுடனான காதல் முறிந்து போனதற்கான காரணம் குறித்து நடிகை ஹன்சிகா கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
நடிகர் சிம்புவும், நயன்தாராவும் முதலில் காதலர்களாக வலம் வந்தனர்.  ஒரு கட்டத்தில் அந்த காதல் முறிந்து போனது. அதன் பின், வாலு படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் இணைந்து நடித்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவானது. அது உண்மைதான் என இருவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால், அந்த காதலும் திடீரெனெ ஒரு நாள் முறிந்து போனது. 
 
இந்நிலையில் அதுபற்றி தற்போது ஹன்சிகா வாய் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும் போது “நானும் சிம்புவும் சரியான ஜோடி என முதலில் நினைத்தேன். ஆனால், ஒருநாள் சிம்பு சொன்ன ஒரு வார்த்தை என் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது.  அதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் பிரிந்து விட்டேன்” என கூறினார். ஆனால், சிம்பு கூறிய அந்த வார்த்தை என்னவென்று அவர் கூறவில்லை. 
 
அப்படி என்னதான் சொன்னீங்க சிம்பு..?


இதில் மேலும் படிக்கவும் :