வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (11:29 IST)

சினிமா பெண்களுக்கு பாதுகாப்பான தொழில் - அனுஷ்கா பேட்டி

சினிமா பெண்களுக்கு பாதுகாப்பான தொழில் - அனுஷ்கா பேட்டி

அனுஷ்கா சினிமா குறித்து பாஸிடிவாக பேசுகிறவர். சினிமாவில் நடித்தாலும், அதனை ஆபத்தான ஒன்றாக பார்க்கும், பேசும் நடிகைகள் மத்தியில் வித்தியாசமானவர். சினிமா பெண்களுக்கு ஏற்ற தொழில் என்று கூறியுள்ள அவரது பேட்டி உங்களுக்காக.


 
 
சினிமாவில் பெண்கள் நடிப்பது பற்றி உங்க எண்ணம் என்ன?
 
சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான தொழிலாகவே இருக்கிறது. எனவே பெண்கள் நடிக்க வருவதற்கு பயப்பட வேண்டாம். 
 
சினிமாவில் அறிமுகமான போது சினிமா குறித்த உங்க கருத்து என்னவாக இருந்தது?
 
நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பயந்தேன். அழுதும் இருக்கிறேன். சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்றும் நினைத்து இருக்கிறேன்.
 
என்ன காரணம்...?
 
அதற்கு காரணம் சினிமாவில் இருப்பவர்களோ அல்லது சினிமா சூழ்நிலையோ கிடையாது. முறையாக எதுவும் கற்றுக்கொள்ளாமல் நான் வந்ததுதான். நடிப்பு பற்றி எதுவும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தேன். கற்றுக்கொண்டதும் சகஜமாகி விட்டேன். 
 
சினிமா குறித்த உங்க தனிப்பட்ட கருத்து என்ன?
 
சினிமாவை பற்றி மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னை பொருத்தவரை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தொழில் சினிமா என்று சத்தமாக சொல்வேன்.
 
பல வருட சினிமா அனுபவம்தான் இப்படி சொல்ல வைக்கிறதா?
 
நான் பெரிய நடிகையாகி விட்டதால் இப்படி சொல்கிறேன். புதுமுக நடிகையாக இருந்தால் சொல்லி இருக்க மாட்டேன் என்று நினைக்கலாம். நானும் புதுமுக நடிகையாக இருந்துதான் பெரிய நடிகையாக உயர்ந்தேன்.
 
புதுமுகமாக உங்க அனுபவம் எப்படி இருந்தது?
 
புதுமுகமாக இருந்த போது என்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. 
 
சினிமாவில் கெட்டதே இல்லை என்கிறீர்களா?
 
நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நல்லது கெட்டதுக்கு அவரவர் எடுக்கும் முடிவுகளே காரணமாகின்றன. 
 
எதிர்காலத்தில் உங்க குழந்தைகள் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டால்...?
 
எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சினிமா தொழிலில் ஈடுபட ஆசை வந்தால் மறுக்க மாட்டேன். சினிமாவில் அவர்களை சந்தோஷமாக அறிமுகப்படுத்துவேன். என் வாழ்க்கையை சினிமா இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை.