ராதிகா ஆப்தேயை படுக்கைக்கு அழைத்த நடிகர்: சாபமிட்டு அனுப்பிய நம்ம ஊர் குமுதவள்ளி

ராதிகா ஆப்தேயை படுக்கைக்கு அழைத்த நடிகர்: சாபமிட்டு அனுப்பிய நம்ம ஊர் குமுதவள்ளி


Caston| Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:47 IST)
சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் பெண்கள் பல சங்கடமான நிகழ்வுகளை கடந்து வர வேண்டும் என்பார்கள். இந்த கலாச்சாரம் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மாறியதாக தெரியவில்லை.

 
 
சில நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பல தர்மசங்கடங்களை வெளியே சொல்லாமல் தங்களுக்குளே அடக்கி வைத்துக்கொள்வார்கள். மிகவும் அரிதான நடிகைகளே அதனை வெளிப்படையாக பேசுவார்கள்.
 
சமீப காலமாக ராதிகா ஆப்தே மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற கருத்துக்கள் வருகின்றன. அவரின் ஆபாச படம் என சிடி போட்டு விற்கும் அளவிற்கு அவரை மிகவும் எரிச்சலடைய வைத்தார்கள்.
 
ஆனால் ராதிகா ஆப்தே நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை கூறி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தன்னை ஒரு நடிகர் தவறான எண்ணத்தில் அனுகியதாகவும், மேலும், மேலும் ஒரு நபருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதையும் தான் அதனை நிராகரித்ததையும் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் அளித்த பேட்டி:-
 
சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து தவறான நோக்கத்தில் பேசினார். இதனால் கடுப்பான நான் அந்த நடிகரை திட்டி விட்டேன்.
 
மேலும் இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகிய ஒருவர் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர். நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :