வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 18 மே 2015 (18:29 IST)

தவறுக்கு தண்டனை, தூக்குத் தண்டனையும் விதிவிலக்கல்ல - புறம்போக்கு டீம் பேட்டி

மரண தண்டனை கூடாது என்று உலக நாடுகள் போராடி வருகின்றன. பல நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன. இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது. மரண தண்டனைக்கு எதிர்ப்பாகவே புறம்போக்கு என்னும் பொதுவுடைமை படத்தை எஸ்.பி.ஜனநாதன் எடுத்துள்ளார். அதில் நடித்தவரே பத்திரிகையாளர் சந்திப்பில் மரண தண்டனையை ஆதரித்துப் பேசியது ஜனநாதனுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே அதிர்ச்சி.


படத்தின் புரமோஷனை முன்னிட்டு மதுரை வந்த போது நிருபர்களுக்கு ஜனநாதன், விஜய் சேதுபதி, ஷாம் பேட்டியளித்தனர்.

எஸ்.பி.ஜனநாதன்
-----------------------------

மரண தண்டனை வேண்டாம் என்று பல நாடுகள் கூறி வருகின்றன. பல தடை செய்துள்ளன. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை கருவாக வைத்தே இந்தப் படத்தை எடுத்தேன்.

கடந்த ஒருவருட கூட்டு முயற்சியின் விளைவாகவே இந்தப் படம் வெளிவந்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை தூக்குத் தண்டனை என்பது கொடுமையான விஷயம். அது சரியா தவறா என்பதை படம் பார்க்கும் ரசிகர்களிடம் விட்டு விட்டேன். அது சரியா தவறா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். ஆர்யா இறப்பது போல் காட்டியது குறித்து கேட்கிறார்கள். ஒரு போராளி இறந்தால் அவன் இடத்தில் இன்னொருவன் வருவான் என்பதை முன்வைத்தே அப்படி காட்சி வைத்தேன். இதேபோன்ற சமூகப் பொறுப்புள்ள படங்களை மட்டுமே இயக்குவேன்.

விஜய் சேதுபதி, ஷாம் பேட்டி அடுத்த பக்கம்..

விஜய் சேதுபதி
------------------------

புறம்போக்கு என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான படம். நான் இதுவரை நடித்ததில் முக்கியமான கதாபாத்திரமும் இதுதான். படத்தில் ஆர்யா, ஷாம், நான் மூவருக்குமே ஜனநாதன் சம வாய்ப்பு வழங்கினார். அனைவருமே அதை உணர்ந்து நடித்தோம். ஆர்யா, ஷாமின் ஒத்துழைப்பு மறக்க முடியாதது.

படத்தில் பங்காற்றிய அனைவருமே பொறுப்பை உணர்ந்து வேலை செய்ததால் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.


 

ஷாம்
---------

எஸ்.பி.ஜனநாதன் ஏற்கனவே அவருடைய இயற்கை படத்தில் எனக்கு வித்தியாசமான வேடத்தை தந்திருந்தார். அந்தப் படம் எனக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதிலும் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான வேடம். படத்தில் தூக்குத் தண்டனையை ஆதரிக்கும் கதாபாத்திரம் எனக்கு.

என்னைப் பொறுத்தவரை தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் தூக்குத் தண்டனையும் விதிவிலக்கல்ல என்பதே என்னுடைய எண்ணம்.