1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Caston
Last Updated : புதன், 4 நவம்பர் 2015 (11:55 IST)

விருதுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - கமலின் கான்ட்ரவர்ஸி பேட்டி

சர்ச்சைகள் உருவாகும் என்பதற்காக கருத்து சொல்லாமல் இருந்ததில்லை கமல். அதே நேரம், எழுத்தாளர்களும், திரைப்பட கலைஞர்களும் தங்களுடைய விருதுகளை திருப்பியளித்து சகிப்பின்மைக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் நேரத்தில் இத்தகைய பேச்சு அவசியமா என்ற கேள்வியையும் கமலின் பேச்சு எழுப்பியிருக்கிறது.


 


மத, இன அடிப்படைவாதத்தில் செயல்படும் ராஜ் தாக்கரேயுடனான சந்திப்புக்கு சில நாள்கள் கழித்து கமல் இந்தக் கருத்தை கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
 
ஹைதராபாத்தில் நடந்த, தூங்கா வனத்தின் தெலுங்குப் பதிப்பான சீக்கட்டி ராஜ்ஜியத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார்.
 
சகிப்புத்தன்மை குறைந்து போய்விட்டதாக போராட்டங்கள் நடப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?
 
சகிப்புத்தன்மை இல்லாமல் போனதால்தான் இந்தியா - பாகிஸ்தான் பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒன்றாக இருந்து சீனா போன்ற நாடுகளுடன் பலதுறைகளில் போட்டிப் போட்டிருக்கலாம்.
 
சகிப்புத்தன்மை குறித்து உங்கள் கருத்து என்ன?
 
சகிப்புத்தன்மை குறித்த விவாதம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவை. நான் சகிப்பின்மைக்கு எதிரானவன். நாந்திகவாதியாக இருந்தாலும், எல்லா மதங்களையும் சகித்துக் கொள்கிறேன். கடவுள் பக்தி இல்லை என்றாலும் மதங்களையோ, அதன் பழக்க வழக்கங்களையோ எதிர்த்ததில்லை. நான் பின்பற்ற மாட்டேன், அது என் உரிமை, அவ்வளவுதான்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....

விருதுகளை திருப்பித் தருவது குறித்து உங்கள் கருத்து என்ன?
 
விருதுகளை திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்த மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும் என்றாலும், கவனத்தை ஈர்க்க இதைவிட வேறு பல வழிகள் உண்டு.


 
 
விருதுகளை திருப்பி அளித்தவர்கள் தவறு செய்ததாக கூறுகிறீர்களா?
 
விருதுகளை திருப்பி அளிப்பவர்கள், எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். எதிர்ப்பை வெளிப்படுத்த அவர்கள் செய்கிற அடையாளச் செயலான அதனை நான் காயப்படுத்த மாட்டேன்.
 
நீங்கள் விருதை திருப்பி அளிப்பீர்களா?
 
நான் எந்த விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். படைப்புபூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.