வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 26 மே 2015 (10:27 IST)

தூங்கா வனம் விறுவிறுப்பான கதையம்சம் உள்ள படம் - கமல், த்ரிஷா பேட்டி

கமல் நடிக்கும் த்ரில்லர், தூங்கா வனத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்படியே படப்பிடிப்பையும் தொடங்கினர். படத்தை இயக்கும் கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
கமல்
 
"நானும் படத்தோட போட்டோஷுட்டுக்குழு வந்தேனே, ஆனால் என் படத்தைப் போடாமல் உங்கப்படத்தை மட்டுமே போட்டிருக்கீங்களே என த்ரிஷா கேட்டார். இது முதல் பார்வை மட்டும்தான். இரண்டாவது பார்வையில் உங்கப் படமும் கண்டிப்பாக வரும் என்று சொன்னேன்" என பேட்டியை ஆரம்பித்தார் கமல்.
தூங்கா வனத்தை ஹைதராபாத்தில் தொடங்க என்ன காரணம்?
 
தூங்கா வனம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடி படமாக தயாராகிறது. உத்தமவில்லன் பட விழாவுக்காக ஐதராபாத் வந்த போது நிறைய பேர் நேரடி தெலுங்கு படத்தில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டனர். விரைவில் நடிப்பேன் என்று பதில் அளித்தேன். தூங்கா வனம் படம் மூலம் அதை நிறைவேற்றுகிறேன். இந்தப் படம் தெலுங்கில், சீகட்டி ராஜ்ஜியம் என்ற பெயரில் தனியாக எடுக்கப்படுகிறது.
 
இயக்குனர் ராஜேஷ் பற்றி சொல்லுங்கள்...?
 
ஏழு ஆண்டுகள் என் சிஷ்யனாக சினிமா பயணத்தில் உடன் இருந்த ராஜேஷ் இந்த படத்தை இயக்குகிறார். ராஜேசுக்கு நான் தான் குரு.
 
சினிமாவில் வெற்றி தோல்வியை கணிக்க முடியுமா?
 
படங்கள் எப்படி வெற்றிபெறுகிறது எப்படி தோல்வி அடைகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஷோலே படம் ரிலீசானபோது கப்பார் சிங் கேரக்டர் பேசப்பட்டது. ஆனால் படத்தின் வெற்றிக்கு அந்த கேரக்டர்தான் காரணம் என்று சொல்ல முடியாது.
 
தூங்கா வனம் எப்படிப்பட்ட படம்?
 
தூங்கா வனம் விறுவிறுப்பான கதையம்சம் உள்ள படமாக இருக்கும்.இரண்டு மணி நேரம் எப்படி போனது என்று தெரியாத அளவுக்கு படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் வெளியே வருவார்கள்.

த்ரிஷா
 
கமல் சாருடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்படியொரு கதாபாத்திரத்தை நான் இதற்குமுன் கண்டிப்பாக செய்ததில்லை. பிரகாஷ்ராஜ் சாருடன் என்னுடைய முதல் தெலுங்குப் படத்தில் நடித்தேன். மீண்டும் அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரகாஷ்ராஜ்
 
கமல் இரு மகாநதி. அது தெலுங்கு ரசிகர்களையும் தொட்டுக் கொண்டு ஓடப் போகிறது.
 
ராஜேஷ்
 
கமல் சாரிடமிருந்து எனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வரம் இந்தப் படம். இந்த வரத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தர முயற்சிப்பேன். 2008 -ஆம் ஆண்டில் மூன்றாவது உதவி இயக்குனராக அவரிடம் சேர்ந்தேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இப்போது ஒரு பரீட்சை ஹாலுக்குள் சென்றது போன்று உணர்கிறேன்.