வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: சனி, 5 நவம்பர் 2016 (11:05 IST)

எனக்கு எப்பவுமே டாப்தான் - வடிவேலு பளிச் பேட்டி

கத்தி சண்டை படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக திரும்ப வந்திருக்கிறார் வடிவேலு. தான் என்ற சுயபெருமிதமும், பேச்சில் விளையாடும் நகைச்சுவையும் வடிவேலிடம் இன்னும் அப்படியே உள்ளன. கத்தி சண்டை படம் குறித்த அவரது பேச்சு கோடை வெயிலுக்கு குளிர்சாரல்...

 
கேப்பும்... ஆப்பும்...
 
"நிறைய பேர், நீண்டநாள் கேப் விட்டு கத்தி சண்டை படத்தில் நடிச்சதா சொல்றாங்க. ஆனா, எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது. எப்பவுமே இந்த வடிவேலு டாப்தான்."
 
வாட்ஸ் அப் வடிவேலு...
 
"நான் படத்துல நடிக்கலைன்னாலும் வாட்ஸ்அப், பேப்பர், அரசியல்னு எல்லாத்துலயும் நான் பயன்படுத்துன வசனம்தான் வருது." 
 
கத்தி சண்டை என்ன மாதிரி படம்...?
 
"கத்திச் சண்டை படத்துல கத்தி சண்டையும் கிடையாது, கத்திப் பேசுற சண்டையும் கிடையாது இது ஒரு புத்திச் சண்டை. இந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."
 
என்ன வேடம்?
 
"படத்துல எனக்கு சைக்கியார்ட்டிக் டாக்டர் கதாப்பாத்திரம்னு இயக்குனர் சுராஜ் சொன்னார். டுபாக்கூர் டாக்டரான்னு கேட்டேன். இல்ல, உண்மையான டாக்டர் தான், ஆனா டுபாக்கூர்னு சொன்னார்."

 
விஷால்...?
 
"நான் விஷால் கூட நடிச்ச முதல் படமான திமிரு சூப்பர் ஹிட். இரண்டாவது படமான நடிகர் சங்க கட்டிடத்த காணோமும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதே மாதிரி, இந்தப் படமும் பெரிய ஹிட் அடிக்கும்."
 
காமெடிக்கு எது களஞ்சியம்...?
 
"நான் எப்பவுமே மனுஷங்ககிட்ட இருந்துதான் காமெடி காட்சிகளுக்கு விஷயம் எடுப்பேன். ஒரு நாள் இப்படித்தான் ரோட்டுல ஒருத்தர் மயங்கிக் கிடந்தார். பாவமேன்னு போய் எழுப்பினா, நான் போதைல படுத்து இருந்தேன்னு அடிக்க வந்துட்டார். இதத்தான் படத்துலயும் காட்சியா வச்சோம்."