வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 27 ஜூலை 2015 (10:41 IST)

நான் நாய்கள் நலம் விரும்பி - விஷால் பேட்டி

நேற்று வள்ளுவர் கோட்டத்தில், கேரளாவில் தெரு நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் நடிகர் விஷால், மன்சூர் அலிகான், வரலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விஷால் பத்திகைகளுக்கு பேட்டிளியத்தார்.
எதற்காக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள்?
 
நாய்கள் நலம் விரும்பி என்ற முறையில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். படிப்பறிவு அதிகம் உள்ளவர்கள் மாநிலத்தில் இது நடப்பது வேதனை அளிக்கிறது.
 
இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?
 
நாய்களை கட்டுப்படுத்துவதாகக் கூறி அவைகளை கூண்டோடு அழிப்பதை கேரள அரசு கைவிட வேண்டும். நாய்களை கொல்வது எந்தவகையிலும் தீர்வாகாது. நாய்களை கொல்வதை விடுத்து, அவற்றை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி முறையையும், கருத்தடை முறையையும் பயன்படுத்தலாம்.
 
கேரளாவில் நாய்கள் கொல்லப்படுவதற்கு போராட்டம் நடத்துகிற நீங்கள், ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொன்றபோது, நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்கவில்லையே?
 
வள்ளுவர் கோட்டத்தில் பந்தல் போட்டுத்தான் போராட்டம் நடத்த வேண்டுமா? வீட்டில் இருந்தபடியும் ஆதரவு தெரிவிக்கலாம். உணர்வுதான் முக்கியம்.
 
நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்கப் போவதாக கூறியிருந்தீர்கள். எப்போது முதல்வரை சந்திக்க இருக்கிறீர்கள்?
 
முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் சந்தித்து நடிகர் சங்க விவகாரம் குறித்து பேசுவேன். 
 
திருச்சி நாடக நடிகர் சங்க நிர்வாகிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதே?
 
அந்த மிரட்டல் கடிதத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.