1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (18:20 IST)

கவர்ச்சி வேடங்களால் என்னுடைய மதிப்பு குறைந்தது - தாப்சி பேட்டி

கவர்ச்சி வேடங்களால் என்னுடைய மதிப்பு குறைந்தது - தாப்சி பேட்டி

தாப்சி அறிமுகமானது ஆடுகளம் படத்தில். தேசிய விருது வாங்கிய படம். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஆடுகளம் படத்திற்கு முற்றிலும் வேறானவை. கவர்ச்சியை வெளிப்படுத்தும் வேடங்களே அவருக்கு கிடைத்தன. 


 
 
இந்நிலையில் இந்தியில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். பல நடிகைகளைப் போல இந்திதான் அவரது லட்சியம். ஆனால் அதைத்தாண்டியும் தாப்சிக்கு சாதிக்க சில உள்ளன. அவை பற்றி தாப்சி சொல்வதை கேட்போம்.
 
தமிழ், தெலுங்கில் உங்களை பார்க்க முடியவில்லையே?
 
இந்தியில் மூன்று படங்களில் நடிக்கிறேன். அதில் கவனம் செலுத்தி நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால்தான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை.
 
இந்தியில் அப்படியென்ன ஸ்பெஷல்...?
 
தமிழ், தெலுங்கில் என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனால், இந்தியில் அப்படியில்லை. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் கிடைத்துள்ளன. என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இந்திப் படங்கள் எனக்கு கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு.
 
உங்கள் பேச்சில் உங்களின் ஆரம்பகால படங்கள் குறித்த திருப்தியின்மை தெரிகிறதே?
 
அது உண்மைதான். நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் பட உலகம் பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. கதைகள் தேர்விலும் அக்கறை இல்லாமல் இருந்தேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடித்தேன். 
 
நிறைய படங்களில் என்னை கவர்ச்சியாகவே நடிக்க வைத்தார்கள். தெலுங்கு படங்களில் அப்படித்தான் நான் வந்தேன். இதனால் என் மீதான மதிப்பு குறைந்தது. கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன.
 
இந்தியில் யாருடன் நடிக்கிறீர்கள்?
 
சங்கல்ப் ரெட்டி இயக்கும் இந்திப் படத்தில் என்னுடன் ராணா, கே கே மேனன் நடிக்கிறார்கள். இந்தப் படம் தெலுங்கிலும் தயாராகிறது. இன்னொரு படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்கிறேன். செப்டம்பர் மாதம் அந்தப் படம் திரைக்கு வருகிறது.
 
சால்ட் அண்ட் பெப்பர் (தமிழில் உன் சமையல் அறையில்) படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறீர்களாமே?
 
ஆம். பிரகாஷ்ராஜ் படத்தை இயக்குகிறார். நானா படேகர், ஸ்ரேயாவுடன் நானும் நடிக்கிறேன். இந்தப் படங்கள் எல்லாமே என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கூடியவை.
 
இந்தியில் நிலையான இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
 
இந்தியில் சிறந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் போட்டியை சமாளித்து நிலைத்து இருப்பது கஷ்டம். ஆனாலும் நான் எனக்குரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு போராடுகிறேன்.
 
இனி தமிழ், தெலுங்கில் உங்களை பார்க்க முடியுமா?
 
இந்தியில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய பிறகு மற்ற மொழி படங்களிலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.