Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எல்லாவற்றிற்கும் கணக்கு இருக்கிறது - நடிகர் சரத்குமார் பேட்டி

Sasikala| Last Modified புதன், 30 நவம்பர் 2016 (12:26 IST)
நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சரத்குமார், ராதாரவி இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். 

 
நடிகர் சங்க பொதுக்குழுவில் பெரும் சண்டை நடந்து முடிந்திருக்கிறது. இவை குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் சரத்குமார் பேட்டியளித்தார்.
 
நடிகர் சங்க பொதுக்குழுவில் அடிதடி நடந்துள்ளதே?
 
நடிகர் சங்கம் நன்றாக நடக்க வேண்டும். இதன் மூலம் நடிகர், நடிகைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.
 
அடிதடிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
 
முதலில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் லயோலா கல்லூரியில் நடக்கும் என்றார்கள். பின்னர் நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றினார்கள். இந்த இடமாற்றம் காரணமாக பலர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
 
பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடியாததில் வருத்தம் உண்டா?
 
எனக்கு இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் இல்லை.
 
உங்கள் மீதான ஊழல் புகார் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
 
முதலில் ஒரு தொகையை ஊழல் செய்துவிட்டதாக கூறினர். பின்னர் இன்னொரு தொகையை சொன்னார்கள். இப்போது ஒரு தொகையை சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கிறது.
 
ஊழல் புகார் பொய் என்கிறீர்களா?
 
என் மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே புதிது புதிதாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 50 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார்கள்.
 
சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்து நீக்கியிருக்கிறார்களே?
 
என்னை நீக்கிவிட்டதாக தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். அதை சட்டப்படி சந்திப்பேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்.
 
பொதுக்குழுவில் நடந்த மோதல், அடிதடி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
எனது மனைவி மூலம் இந்த பிரச்சினைகளை தெரிந்து கொண்டேன். நடிகர் சங்கம் என்றால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நான் தலைவராக இருந்தபோது இது போன்ற பிரச்சினைகள் வந்ததே இல்லை. நல்லது நடப்பதற்காக இயங்க வேண்டிய நடிகர் சங்கத்தில் பிளவும், மோதலும் ஏற்படுவது வேதனை. நடிகர் சங்க ஒற்றுமை சீர்குலைந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :