1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By ஜே.பி.ஆர்
Last Updated : ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (16:21 IST)

புரட்சித் தலைவரைப் பார்த்து சூப்பர் ஸ்டார் காப்பியடிச்சிருக்கலாம் - நடிகர் ஆர்கே பேட்டி

சின்ன இடைவெளிக்குப் பிறகு என் வழி தனி வழி படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார் ஆர்கே. வழக்கம் போல உற்சாகமான பேச்சு. படம் குறித்த அவரது கருத்துகள் இங்கே உங்களுக்காக.
 
ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி...?
 
எனக்கு எதையாவது செய்தால் கரெக்டா செய்யணும், இல்லைன்னா பேசாமல் இருக்கணும். எல்லாம் அவன் செயலுக்கு அப்புறம் எனக்கு ஒரு நல்ல படம் வேணும்னு நினைச்சுகிட்டிருந்தேன்.
 
அதுக்கப்புறம் படம் பண்ணுனேன். வடிவேல் சார்கூட பண்ணுனேன். புலிவேஷம் வாசு சார்கூட பண்ணுனேன். பாலா சார்கூட அவன் இவன் பண்ணியிருக்கேன். ஆனா என் வழி தனி வழி கொஞ்சம் ஸ்பெஷல்.
 
எப்படி...?
 
என் வழி தனி வழி காவல்துறை சம்பந்தப்பட்ட கதை. படம் முடிஞ்சாச்சு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள ரிலீஸ் பண்ணப் போறேnம். பெரிய பட்ஜெட்ல பண்ணிருக்கோம். ஷாஜி கைலாஷ் சாரைப் பொறுத்தவரை மேக்கிங்கில் எந்த கன்பியூஸும் வச்சுக்க மாட்டார். நல்லா பண்ணி தந்திடுவார். நல்ல கதை கொடுத்தா மிகச்சிறப்பா பண்ணி தந்திடுவார்.
 
இது எப்படிப்பட்ட கதை?
 
இது மிகச்சிறந்த கதை. எல்லாம் அவன் செயல் பார்த்தப்ப எல்லோரும் என்னை வக்கீல்னு சொன்னாங்க. இந்தப் படம் பார்த்தீங்கன்னா இவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி, போலீஸ்காரர் அப்படீன்னு ஹன்ட்ரட் பர்சன்டேஜ் எல்லோரும் சொல்வாங்க.

 
உணர்வோட பண்ணியிருக்கோம், உழைச்சிருக்கோம். இந்தியாவில் இருக்கிற எந்த குடிமகன் இந்தப் படத்தைப் பார்த்தாலும், இதே மாதிரி ஒண்ணு வேணும்யா அப்படீன்னு சொல்வாங்க. அந்தமாதிரி ஒரு விஷயத்தை கையிலெடுத்துகிட்டு பண்ணியிருக்கோம். 
 
ஹீரோயின்?
 
மீனாட்சி தீட்ஷித், பூனம் கவுர் இரண்டு பேர் இருக்காங்க. ஒருத்தர் எங்கூடவே காவல்துறையில் பணிபுரிகிறவரா வர்றாங்க. இன்னொருத்தர் கிராமத்தில் என் மாமாவைதான் கண்டிப்பேன்னு சொல்ற மாதிரி. 
 
பிற நடிகர்கள்...?
 
இளவரசு சார், தலைவாசல் விஜய், தம்பி ராமையா, சிங்கமுத்து, ஆஷிஷ் வித்யார்த்தி, ரோஜா, சீதான்னு பெரிய டீமே இருக்கு. விசு சார் பண்ணியிருக்காங்க. நல்ல ஆர்டிஸ்ட், நல்ல கதைக்களம் இரண்டுமே இருக்கு. 
 
காமெடி...?
 
இதுல தம்பி ராமையாவும் சிங்கமுத்துவும் ஜோடியா கலக்கியிருக்காங்க. இனிமேல் அவங்க ஜோடியா நிறைய படங்கள் நடிப்பாங்க. அந்தளவுக்கு இருக்கும். வாழ்க்கையில திருடுனா பெரிய ஆளாயிடலாம்ங்கிற கேரக்டரை பண்ணியிருக்காங்க.
 
வழக்கமா உங்கப் படத்தில் வடிவேல்தானே காமெடியன். இந்தப் படத்தில் என்னாச்சி?
 
அவரு ஹீரோவாயிட்டார். என்னைப் பொறுத்தவரைக்கும் என் படத்தில் முதல் வாய்ப்பு அவருக்குதான். நான் நேரே போய் பேசினேன். நான் ஹீரோவா பண்ணிட்டிருக்கேன். அடுத்தப் படமும் ஹீரோவா பண்றேன் அப்படீன்னார்.
 
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் மேலும் மேலும் வளரணும்ங்கிற எண்ணமுடையவன். சத்தியமாக ஜெயிக்கும் தலைவா அப்படீன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.
 
என் வழி தனி வழி ரஜினியின் டயலாக் ஆச்சே...?
 
சூப்பர் ஸ்டாருக்கு முன்னால் புரட்சித் தலைவரின் வார்த்தை இது, என் வழி தனி வழி. புரட்சித் தலைவர் என் வழி தனி வழின்னு டயலாக் பேசியிருக்கார்.

அவரைப் பார்த்து சூப்பர் ஸ்டார் காப்பியடிச்சிருக்கலாம், இல்லைன்னா பிடிச்சிருக்கலாம். எல்லாமே ஒரு இன்ஸ்பிரேஷன்தானே. என் வழி தனி வழிங்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது, வச்சுகிட்டேன்.