வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (09:45 IST)

எப்பவுமே சிரிச்சுகிட்டே இருப்பேன் - ஆனந்தி பேட்டி

கயல், பொறியாளன் படங்களுக்குப் பிறகு ஆனந்தி நடித்திருக்கும் படம், த்ரிஷா இல்லனா நயன்தாரா. அழுத்தமான கதாபாத்திரங்களைவிட ஜாலியான கதாபாத்திரங்கள்தான் சட்டென்று ரசிகர்களை ஈர்க்கிறது. ஆனந்திக்கு இந்தப் படத்தில் அப்படியான வேடம். எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறவர் கூடுதல் பளீருடன் இருந்தார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்.  ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவிலும் சிரிப்பை இட்டு நிரப்பிய அவரது பேட்டி உங்களுக்காக.
த்ரிஷா இல்லனா நயன்தாரா பற்றி சொல்லுங்க?
 
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்தப் படத்தோட சாங்ஸ் பெரிய ஹிட்டாகியிருக்கு. ட்ரெய்லர், சாங்ஸ் எல்லாருக்கும் ரீச் ஆகியிருக்கு. அதனால இந்தப் படத்து மேல நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கு. இந்தப் படம் உங்க எல்லாருக்கும் பிடிக்கும்.
இந்தப் படத்தில் உங்க கதாபாத்திரம் எப்படிப்பட்டது?
 
நான் முன்னாடி சென்ஸிடிவ் வில்லேஜ் கேரக்டர் பண்ணுனேன். இதுல ரொம்ப போல்ட் அண்ட் அவுட்ஸ்போக்கன் கேரக்டர். ஸேn எனக்கும் பார்க்கிறவங்களுக்கும் புதுசா இருக்கும். 
 
ஹீரோ ஜீ.வி.பிரகாஷ் பற்றி...?
 
ஜீ.வி. என்னோட நல்ல ப்ரெண்ட். ரொம்ப சப்போர்ட் பண்ணுவார். 

எந்த மாதிரி?
 
நான் எல்லா ஷாட்டுக்கும் சிரிப்பேன். அவர்தான், சிரிக்காதீங்க, நல்லா பண்ணுங்கன்னு என்கரேஜ் பண்ணுவார். ரொம்ப சப்போர்டிவா இருந்தார். ஹி இஸ் குட் ப்ரெண்ட் ஆஃப் மைன்.
 
மனிஷா, சிம்ரன் உங்களுடன் நடித்திருக்கிறார்கள்...?
 
மனிஷா, சிம்ரன் எல்லாம் நல்ல கோ ஸ்டார்ஸ். வெரி ஃபன். நான் ரொம்ப ஹேப்பியா பண்ணுன படம் இது. 
இயக்குனர் பற்றி...? 
 
ஆதிக் ரொம்ப டேலண்டட். எல்லா ஷாட்டும், எல்லா ப்ரேமும் புதுசா எப்படி பண்ணலாம்னு பார்த்து பண்ணுவார். அது மாதிரி கேமராமேன். எப்படி எல்லாத்தையும் அழகா காமிக்கலாம்னு யோசித்து பண்ணியிருக்கார்.
 
உங்களை சிலர் ரக்ஷிதா என்று அழைக்கிறார்களே?
 
ரக்ஷிதா என்னுடைய இயற்பெயர். பிரபுசாலமன் சார்தான் மைனா படத்துக்காக அதை கயல் என்று மாற்றினார்.
 
இந்தப் படத்தின் கதை பற்றி சொல்லுங்கள்?
 
இது இளைஞர்களை பற்றிய படம். ஆண், பெண் இரண்டு பேரின் ஆக்டிட்யூட் எப்படி இருக்கும் அப்படீங்கிறதை சொல்ற படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையையும் நினைவுகூர்ற மாதிரி இந்தப் படம் இருக்கும்.