1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (15:12 IST)

பத்தாயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருக்கேன் - ஜீவன் பேட்டி

ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தப் படம் காக்க காக்கவில் வில்லனாகி கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜீவன். திருட்டு பயலே, நான் அவனில்லை என்று மினிமம் கியாரண்டி நடிகராக வளர்ந்து வந்தவரை திடீரென்று காணவில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு அதிபர் படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜீவனின் பேட்டி.
நீங்க சென்னையில் இல்லை, உங்களை பார்க்க முடிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
 
நான் ஊர்ல இருக்கிறதில்லை, வெளியூர் வெளிநாடு போயிடறேன், தயாரிப்பாளர்களால என்னை மீட் பண்ண முடியுறதில்லைன்னு தவறான வதந்தி உலவுகிறது. அதெல்லாம் வதந்திதான்.
 
நீங்க இப்போ சென்னையில்தான் இருக்கிறீர்களா?
 
ஆமா, சென்னையில்தான் தங்கியிருக்கேன். சென்னை தி.நகரில் பத்தாயிர ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் குடியிருக்கேன்.
 
உங்களை எளிதில் சந்திக்க முடியாது என்பதெல்லாம்...?
 
வதந்திதான். நிறைய பேரை சந்திச்சுகிட்டிருக்கேன். நிறைய கதைகள் கேட்கிறேன். டைரக்டர்ஸ் யார் வேணும்னாலும் என்னை சந்திக்கலாம், கதை சொல்லலாம்.

உங்க படங்களில் நாயகிகள் அதிகம் இருப்பது ஏன்?
 
நான் அவன் இல்லை படம் 1975 -இல் கே.பி. சார் டைரக்ஷனில், ஜெமினி சார் நடிச்சு வெளிவந்தது. அந்தப் படத்தை அதே பெயர்ல ரீமேக் பண்ணுனோம். தமிழ்ல ஒரு பழைய படத்தை ரீமேக் பண்றது அதுதான் முதல் தடவை. அதுல ஆறு ஹீரோயின்ஸ். அப்புறம் அதன் சீக்வெல், நான் அவன் இல்லை டூ. தமிழ்ல ஒரு படத்தோட சீக்வெல் வர்றதும் அதுதான் முதல் தடவை. அதுல அஞ்சு ஹீரோயின்ஸ். இது எதேச்சையா அமைஞ்சது. 
இந்தப் படத்தில...?
 
ஒரேயொரு ஹீரோயின்தான். வித்யா பிரதீப். நல்லா நடிச்சிருக்காங்க.
 
அதிபர் கதை என்ன?
 
முன்பு நடிச்ச படங்களில் பெண்கள் எங்கிட்ட ஏமாறுவாங்க. இதில் நான் மத்தவங்ககிட்ட ஏமாறுவேன். உண்மை சம்பவத்தை வச்சு படம் தயாராகியிருக்கு. 
 
படம் எப்படி வந்திருக்கிறது? எப்போ ரிலீஸ்?
 
நல்ல படமா வந்திருக்கு. நிறைய டுவிஸ்ட் படத்துல இருக்கு. பாரின்ல படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். இந்த மாசம் திரைக்கு வந்துவிடும்.