1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2017 (13:08 IST)

நடிப்பின் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள விஷயங்களை சொல்ல முடியும் - நடிகை காயத்ரி பேட்டி

சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது. இதில் நாயகியாக நடித்திருப்பவர் காயத்ரி. படம் குறித்த தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

 
சாயா என்ன மாதிரியான படம்?
 
தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாக பேசுவதோடு, இன்றைய கல்வி நிலையங்களின் உண்மையான  முகத்தை தோலுரித்துக்காட்டும் படமாகவும் சாயா படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இதன் முக்கியத்துவம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
 
குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆசிரியர்களும் எப்படி  நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாடம் சொல்லிக்கொடுக்கும் படமாக சாயா இருக்கும்.
 
பட அனுபவம் எப்படி இருந்தது?
 
ஒரு காட்சியில் நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது, பயந்தேன்.  ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே  டேக்கில் நடிக்க முடிந்தது.
 
உங்களுடையது சமூக அக்கறை உள்ள கதாபாத்திரமா?
 
ஆமாம். இதுபோன்ற சவாலான வேடங்களும் சமூக அக்கறையுள்ள படங்களாக கிடைத்தால் நடிப்பின் மூலம் சமூகத்திற்கும்  பயனுள்ள செய்திகளை சொல்ல முடியும்.
 
உங்கள் நடிப்புக்கு கைத்தட்டல் கிடைத்ததா?
 
படத்தின் ஒரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் என கேட்க, மூன்றாம்  நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்டது யார் யார் என மூச்சுவிடாமல்  பேசி நடித்ததும் யூனிட்டே கைத்தட்டி என்னை பாராட்டியது.
 
ஒரே டேக்கில் எப்படி நடிக்க முடிந்தது?
 
தமிழ் தெரிந்ததால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது.