வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (16:28 IST)

ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட நட்புதான் இந்தியாவின் தோல்விக்குக் காரணம் – மூத்த வீரர் கருத்து!

இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்ததற்குக் காரணம் ஐபிஎல் தொடரில் இரு அணி வீரர்களும் நெருக்கமாக நட்பாக பழகியதுதான் காரணம் என  ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு  ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது. கடைசியாக நடந்த மூன்றாவது போட்டியை இந்திய அணி ஆறுதல் வெற்றியாக பெற்றது. இந்நிலையில் நாளை முதல் டி 20 போட்டி நடக்க உள்ளது. இதில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரை இழந்ததற்கு பழி தீர்க்கும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்ததற்குக் காரணம் ஐபிஎல் தொடரில் இரு அணி வீரர்களும் நட்பாக பழகியதுதான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்திய வீரர்களிடம் போட்டியில் ஆக்ரோஷம் இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். வழக்கமாக இந்திய ஆஸ்திரேலியா தொடர் என்றால் வீரர்களுக்கு இடையே பேச்சில் அனல் பறக்கும். ஆனால் இந்த முறை சுமூகமாக போட்டி நடந்து முடிந்தது.