வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:21 IST)

உலக இடது கைப் பழக்கமுள்ளோர் தினம் – யுவ்ராஜ் சிங் பகிர்ந்த 4 பேட்ஸ்மேன்களின் புகைப்படம்!

இன்று உலகம் முழுவதும் இடது கைப் பழக்கமுள்ளோரின் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1976 ஆம் ஆண்டு முதல் உலக இடது கைப் பழக்கமுள்ளோரின் தினமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரும் இடதுகை பேட்ஸ்மேனுமான யுவ்ராஜ் சிங் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நான்கு இடதுகை பேட்ஸ்மேன்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி  ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் இடதுகை வீரர்களின் சிறந்த வீரர்கள் பட்டியலில் உங்களுக்கு பிடித்தவர்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.