ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2017 (22:16 IST)

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி, அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.



 
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. சீவர் 51 ரன்களும் , டெய்லர் 45 ரன்களும் எடுத்தனர்.
 
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ராட் 86 ரன்கள்  எடுத்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அரையிறுதியில் 171 ரன்கள் எடுத்த கெளர் 51 ரன்கள் எடுக்க இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறியது. ஆனால் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்ததால் இந்திய அணி 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்து கோப்பையை நழுவவிட்டது.