1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனைக்கு வெள்ளி!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனைக்கு வெள்ளி!
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
கடந்த சில நாட்களாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் அதில் இந்தியாவை சேர்ந்த அன்ஷுமாலிக் என்ற வீராங்கனை மிக அபாரமாக விளையாடி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீராங்கனைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஒரு சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்த நிலையில் தற்போது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது இந்தியாவுக்கு பெருமை தரக்கூடியது ஒன்று என்று கூறப்படுகிறது