1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (13:45 IST)

டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத மே.இ.தீவுகள்: 3வது போட்டியிலும் தோல்வி!

West indies
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தகுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் தகுதி பெற தகுதி தவறிவிட்டது அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது 
 
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
 இதனால் அயர்லாந்து உலகக் கோப்பை டி20 தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது என்பது தெரிந்ததே

Edited by Mahendran