செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (15:41 IST)

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாடு எது? பிசிசிஐ அறிவிப்பு!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதால் இந்த போட்டி வேறு நாட்டுக்கு நாம் மாற்றப்படும் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அவர்கள் அதிகாரபூர்வமாக டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு தான் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐபிஎல் போட்டியை போலவே டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது இந்தநிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது