1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 23 நவம்பர் 2022 (07:39 IST)

உலகக் கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த பிரான்ஸ்!

aus vs fran
உலகக் கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த பிரான்ஸ்!
உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பிரான்ஸ் அணியை துவம்சம் செய்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய போட்டியில் பிரான்ஸ் அணி அடுத்தடுத்து 4 கோல்கள் போட்டு அசத்தியது. 
 
ஆனால் ஆஸ்திரேலிய அணியினர் கோல்கள் போட போராடிய நிலையில் ஒரே ஒரு கோல் மட்டும் போட்டனர். இதனை அடுத்து இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் மெக்ஸிகோ மற்றும் போலந்து இடையிலான போட்டி டிரா ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva