1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (18:23 IST)

மகளிர் பிரீமியர் லீக் : குஜராத் அணியின் கேப்டன் அறிவிப்பு..!

women ipl
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் 5 அணிகள் தேர்வு பெற்று இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த ஐந்து அணிகளில் ஒன்றான குஜராத் ஜெயன்ட் அணியின் நிர்வாகம் தற்போது கேப்டன் யார் என்ற விவரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குஜராத் ஜெயன்ட் அணியின் கேப்டனாக பெத் மூனி என்பவர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 72 ரன்கள் அடித்து விளாசியவர்  தான் இந்த பெத் மூனிஎன்பவர் குறிப்பிடத்தக்கது. 
 
ரூபாய் 2 கோடிக்கு பெத் மூனி என்பவரை குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது என்பதும் இதனை அடுத்து அவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் சினே ராணா என்பவர் துணை கேப்டனாக இந்த அணிக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மகளிர் ஐபிஎல் போட்டி நான்காம் தேதி தொடங்க உள்ளது என்பதும் முதல் போட்டியில் குஜராத் அணி மும்பை இந்தியன்சை சந்திக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran