ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By SInoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (23:29 IST)

ஒலிம்பிக் போட்டிகள் ரத்தா…? ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் !

கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவியது. அதனால் அனைத்து உலக நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் தொடர் கொரொனாவால் தள்ளிவைக்கப்பட்டு, இந்த ஆண்டு நடைபெரும் எனக் கூறப்பட்டது. ஆனால் கொரொனா இரண்டாம் அலை பரவி வருவதால் இப்போட்டிகள் நடைபெறாது என வதந்திகள் பரவியது.

இந்நிலையில் ஒலிம்பிக் கமிட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரொனா காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவறானது. திட்டமிட்டபடி வரும் ஜூலை  மாதம் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் எனத் தெரிவித்துள்ளது.