1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (07:28 IST)

ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: யாருக்கு ஆப்பு?

ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: யாருக்கு ஆப்பு?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடியது அடுத்து அவர் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாஹாவுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
 
கடந்த 14ஆம் தேதி ஆரம்பித்த நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான 3 நாள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. விகாரி 101 ரன்களும், புஜாரே 93 ரன்களும் எடுத்தனர்
 
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து லெவன் அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இதில் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியில் கடந்த சில போட்டிகளில் இடம் பெறாமல் இருக்கும் ரிஷப் பண்ட் நேற்று தனது திறமையை நிரூபித்ததால் அவருக்கு வரும் 21ஆம் தேதி தொடங்கும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்கெட் கீப்பராக இருக்கும் சாஹல் பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்பதால் அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்