திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2020 (14:43 IST)

கொரொனாவால் எந்த தடையும் இல்லை – திட்டமிட்டபடி நடக்கும் ஐபிஎல் !

கங்குலி

கொரோனா வைரஸ் பற்றிய பீதி இந்தியாவில் அதிகமாகியுள்ள நிலையில் மக்கள் கூடும் ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகத்துக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார்.

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி சுமார் 50 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3000 என சீன அரசு அறிவித்துள்ளது.

ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் இந்த வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு 27 நாட்கள் அதாவது மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளை பார்க்க லட்சக்கணக்கானவர்கள் ரசிகர்கள் மைதானத்துக்கு வருவார்கள். அதனால் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்குப் பதிலளித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குல் ‘உரிய பாதுகாப்புகளோடு திட்டமிட்ட தேதியில் ஐபிஎல் தொடங்கும்’ என அறிவித்துள்ளார்.