திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (12:04 IST)

இந்த இருவருக்கு இன்னும் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை… குழப்பத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இருக்கும் ரஹானேவும், பஞ்சாப் அணியில் இருக்கும் கெய்ல் ஆகிய இருவருக்கும் இன்னும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன் கெய்ல். பெங்களூர் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு அவர் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்த நிலையில் மீண்டும் அதே அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதே போல மற்றொரு வீரரான அஜிங்க்யே ரஹானேவுக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இன்னமும் வாய்ப்புக் கொடுக்கவில்லை. இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.