1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (13:42 IST)

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைவது எப்போது? ஐசிசி தகவல்

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை இணைக்க கடந்த பல ஆண்டுகளாக முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து ஐசிஐசிஐ முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது 
 
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் ஒலிம்பிக் போட்டியில் உலகின் பல்வேறு முக்கிய விளையாட்டுக்கள் இணைக்கப் பட்டுள்ளன என்பது தெரிந்ததே. ஆனால் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஐசிசி முயற்சித்து வருகிறது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 2028 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த முயற்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது 
இது சாத்தியம் என்றால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து ஒலிம்பிக் போட்டியின்போது காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது