வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 17 மே 2023 (07:18 IST)

மும்பை தோல்வியால் சிஎஸ்கே குஷி.. இன்னும் யார் யாரெல்லாம் தோற்கணும்..?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்ததாலும் லக்னோ அணி பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்பதாலும் சிஎஸ்கே ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்
 
ஐபிஎல் போட்டி தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் குஜராத் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து மீதமுள்ள ஏழு அணிகளில் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் தகுதி பெற வேண்டும் என்றால் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை அந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தால் லக்னோ, மும்பை, பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு அணிகளில் இரண்டு அணிகள் ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும் என்ற நிலை உள்ளது. 
 
மும்பை மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகள் தங்களது அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடும். அந்த நிலையில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தாங்கள் விளையாடும் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தே ஆக வேண்டும் அப்போதுதான் சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by siva