வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 அக்டோபர் 2018 (21:28 IST)

விராத் கோஹ்லி சதம் வீண்; இந்தியா போராடி தோல்வி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி 'டை'யிலும் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்தது. ஹோப் 95 ரன்களும், நர்ஸ் 40 ரன்களும், ஹெட்மியர் 37 ரன்களும் எடுத்தனர்.

284 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் விக்கெட்டை 2வது ஓவரிலேயே இழந்தாலும் கேப்டன் விராத் கோஹ்லி அருமையாக விளையாடி சதமடித்தார். அவர் 107 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அதன்பின்னர் சொற்ப ரன்களில் விக்கெட்டுக்கள் வரிசையாக விழுந்ததால் இந்திய அணி இறுதியில் 47.4 ஒவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது