1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:31 IST)

எங்களால் எதையும் செய்ய முடியும்: வாட்சன் சூளுரை

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட வெளியேறும் சூழ்நிலையில் இருந்தாலும் நூலிழை வாய்ப்பு இன்னும் சுற்றுக்கு செல்வதற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று ஒருசில அணிகள் தோல்வி அடைந்தால் சென்னை அணி நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி இனி வரும் நான்கு போட்டிகளில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சில வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வாட்சன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது ’அடுத்த நான்கு போட்டிகளில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றும் அசாதாரண திறமையை வெளிப்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளதாகவும் அடுத்து வரும் போட்டிகளில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
சிஎஸ்கே ரசிகர்கள் எங்களுக்கு நிபந்தனை இல்லாத அன்பை தந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவருடைய அன்புக்கு திரும்ப செலுத்தும் வகையில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் வாட்சன் சூளுரைத்துள்ளார். வாட்சனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது