செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 அக்டோபர் 2021 (10:47 IST)

இந்த வீரரை பிசிசிஐ பட்டை தீட்டவேண்டும்… சேவாக்கின் மனதில் இடம் பிடித்த ஹர்ஷ்தீப்!

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஹர்ஷ்தீப் சிங் தனது சிறப்பான பந்துவீச்சால் கவனம் பெற்று வருகிறார்.

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான ஹர்ஷ்தீப் சிங் தனது சிறப்பான பந்து வீச்சு மூலமாக அணிக்கு வெற்றிகளைக் குவித்து வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய அவர் தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் கணிசமாக விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இந்த சீசனில் 10 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இவரைப் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ‘அர்ஷ்தீப் ஜாகீர் கானுடன் 3 நாட்கள் பணியாற்றியதாக கூறினார். அதற்குள்ளாகவே அவர் பந்தை ஸ்விங் செய்ய கற்றுக்கொண்டார் என்றால் எவ்வளவு திறமை. அவரது திறமைகளை கவனித்து பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் திறமையான வீரர். கடினமாக உழைத்தால் கண்டிப்பாக ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவார்’ எனக் கூறியுள்ளார்.