1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By ashok
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (11:50 IST)

சர்வதேச செஸ் தொடர் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் 9 வது இடம்

சின்கியூபீல்ட் சர்வதேச செஸ் தொடரில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த் 7 வது சுற்றையும் டிரா செய்தார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியூபீல்ட் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் அட்டவணையில் முதலாவதாக இருக்கும் பல்கேரியா நாட்டை சேர்ந்த வாசெலின் தபலோவை எதிர்கொண்டார்.

இதற்க்கு முன் 6 முறை டிரா செய்த நிலையில், நேற்று வாசெலின் உடன் தொடர்ந்து விளையாடிய ஆனந்த் முதலில் நிதனமாக விளையாடி வந்தார். பரபரப்பாக சென்ற ஆட்டம் ,ஆனந்த் 39 -வது காய்நகர்த்தலில் வாசெலினை டிரா செய்தார். இந்நிலையில் நேற்று 7-வது சுற்று ஆட்டத்தையும் விசுவநாதன் ஆனந்த டிரா செய்துள்ளார். மேலும் 2 சுற்றுப் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், ஆர்மீனியாவின் அரோனியன் 5 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், வாசெலின் 3.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் ஆனந்த் இரண்டரை புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.